தமிழ் திரைப்படங்களில் பெண்கள் மலர்களைப்போல கண் கவர் பொருட்களாகவும் மென் பொருட்கள் , ஆண்கள் இலட்சியவாதிகள் , போராளிகள் , சாதனையாளர்கள் , மனம் தளராமல் போராடி விரும்பியதைப்பெரும் வீரர்கள். அரண்மனை என்றோரு திரைப்படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது.அதைப்பார்த்த பின் தமிழ்த்திரைப்படங்களில் சித்தரிகிகப்படும் பெண் பேய்களின் பரிதாபத்திற்குரிய நிலையினைப் பற்றிப் பகிறாமல் இருக்க இயலவில்லை. மலர்களைக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனம் என்பது எனக்கு புதிதாக மணம் செய்துகொண்டவர்களை நினைவுபடுத்ததும்.அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட மத்திய அரசின் புகைவண்டியில் வந்தவரோ ' முற்றும் துறந்த தெய்வாம்சம் பொருந்திய துறவி '! ஒரு மனிதனுக்கு நேரப்போகும் துன்பத்தினை முன்பே அறிந்துகொண்ட எவராலும் அவனை காப்பாற்ற தன்னாலான அனைத்தையும் செய்து அவனைக் காப்பாற்ற ம...