தமிழ் திரைப்படங்களில் பெண்கள் மலர்களைப்போல கண் கவர் பொருட்களாகவும் மென் பொருட்கள், ஆண்கள் இலட்சியவாதிகள்,போராளிகள்,சாதனையாளர்கள்,மனம் தளராமல் போராடி
விரும்பியதைப்பெரும் வீரர்கள்.
அரண்மனை என்றோரு திரைப்படம்
சில வாரங்களுக்கு முன் வெளியானது.அதைப்பார்த்த பின் தமிழ்த்திரைப்படங்களில்
சித்தரிகிகப்படும் பெண் பேய்களின் பரிதாபத்திற்குரிய நிலையினைப் பற்றிப் பகிறாமல்
இருக்க இயலவில்லை.
மலர்களைக்கொண்டு
அலங்கரிக்கப்பட்ட வாகனம் என்பது எனக்கு புதிதாக மணம் செய்துகொண்டவர்களை
நினைவுபடுத்ததும்.அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட மத்திய அரசின் புகைவண்டியில் வந்தவரோ 'முற்றும் துறந்த
தெய்வாம்சம் பொருந்திய துறவி'!ஒரு
மனிதனுக்கு நேரப்போகும் துன்பத்தினை முன்பே அறிந்துகொண்ட எவராலும் அவனை காப்பாற்ற
தன்னாலான அனைத்தையும் செய்து அவனைக் காப்பாற்ற முயற்ச்சிக்காமல் இருக்க இயலுமா? இவர் இருப்பார்.ஏனெனில்
இவரது இன்ப சுற்றுலா தடைப்படலாகாதல்லவா?
சரி அவர்
போகட்டும்.பூக்கள் வாடுகின்றன.
வேலை
தேடி வந்த வடநாடடுத் தம்பதியின் மகள் செல்வி.கோவில் கட்டிட வேலை செய்யும் வேளை
இடிபாடுகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.வேரோரிடத்தில் வேரேதேனும் தொழில்
செய்திருந்தால் அவர்கட்கு இந்நிலை ஏற்ப்பட்டிருக்காது.செல்வியும் தாய்ப்பாசமும்
தந்தையின் அரவனைப்பும் இன்றி அயலோரின் இல்லத்தில் வளர்ந்திருக்க
தேவையில்லை.இச்சம்பவங்கள் நேரக் காரணம் யார்? கோவில் என்று ஒன்றை கட்டி காலம் தள்ளும் பார்ப்பானோ அல்லது தன்னால்
ஒன்றும் இயலாது என்று அமர்ந்திருக்கும் கடவுள் சிலையோ அல்லது அதைக் கட்டிய
கட்ட்டக்கலைஞர்களோ அன்றி வேறு யார்? 'பெத்தவங்களயே காவு வாங்குனதுனாலயோ என்னவோ ஆத்தாவே அவ உடம்புல வர்றா' என்று ஓர்
பிஞ்சுக்குழந்தையின் மேல் பழி சுமத்துவது எப்படி நியாயமாகும்?
அது ஏன்
பூசாரி வீட்டுக் குழந்தைமேல் வராமல் பெற்றோரைக்கொன்ற அனாதைக் குழந்தை மீது ஆத்தா
வருகிறாள்?ஏனென்றால்
பூசாரி வீட்டுக்குக் குடும்பம் குழந்தை அனைத்தும் வேண்டுமே!மேலும் அவளை மனதாலும்
உடலாலும் துன்புருத்தி வசியம் செய்து வியாபாரம் செய்தால் அவளது குடும்பத்தினருக்கு
வலிக்குமே!செல்வி கேட்ப்பாரற்ற அனாதை அன்றோ?ஆகையால் அவளே பொருத்தமான தேர்வாகிறாள்.
வலிமைமிக்க
இலட்சியவாதியான உறுதியான உள்ளன்புடன் உருகி உருகி காதல் புரியும் ஆண், தன் கனவு வாழ்க்கையை
அடையுமுன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால் அவன் அமைதியாக
அழிந்துபோகிறான்..தனது நிறைவேறாத ஆசைகளுக்காக அந்த வீரன் ஆவியாக வந்து
போராடுவதில்லை.அப்படி அவன் வந்தாலும் ஈயாக வருவானே தவிர பேயாக வருவதில்லை..தீயோரை
அழிப்பானே தவிர வேப்பிலையால் முகத்தில் சப்பு சப்பு என்று அடி வாங்குது
கிடையாது...வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு காடு மேடுகளில் அலைவது கிடையாது...கருவளயமும்
காயங்களும் அவர்களது முகத்திலிருந்து ஒர் நல்ல பேய் மருத்துவரால்
நீக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன அவர்கள் எந்நேரமும் பொலிவான தோற்றத்துடனே
தோண்றுகின்றனர்.
செல்வி
என்ற இந்தப் பெண் பேய் செய்யும் கொலைகளில் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள்
தண்டனை தருவதாகவே நமக்குத் தெரிகின்றது. அவளது பரிதாப நிலைக்காக நம் மனம்
வேதனைப்படுகின்றது.
தன்னை
முற்றிலும் மறந்துவிட்டு மற்றொரு பெண்ணுடன் இனிதே இல்வாழ்க்கை நடத்தும் தம்
முந்நாள் காதலர்கள் மீது பெண் பேய்களுக்கு ஏன் கொள்ளைப்பிரியம் என்பது எனக்கு
விளங்குவதேயில்லை!!!
தெய்வமாக
கருதப்பட்ட ஒரு பெண்ணை பேயாக்கி இன்னொரு பெண்ணின் மணாளன் மீது ஆசை கொண்டவளாக
காட்டுவதையும் இந்த சமுதாயம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது!
கிரகணம்
முடியும் வரை கடவுளுக்கு சக்தி கிடையாதாம் பேய்க்கு சக்தி அதிகமாம்..ஆனால் கிரகணம்
முடியுமுன் பால் கலந்த நீரில் கால் படுவதனால்
பேய் பிரிந்து காற்றில் கரைந்துவிடுகின்றது..அவ்வளவு பாலை ஆற்றில்
ஊற்றுவதனால் அவ்வளவு பாலும் வீணாவதோடல்லாமல் தண்ணீரையும் மாசு படுத்துவதைத்தவிற
வேறு எதுவும் நடப்பதாக எனக்குத் தோண்றவில்லை.
அவரவரின்
கரிய எண்ணங்களின் வடிவமாய் ஒளிபரப்ப்ப்படும் தமிழ் சினிமாவின் பெண் பேய்களின்
நிலையைக்கண்டால் பரிதாபமாயிருக்கிறது....இதையே உண்மை என நம்பும் பாமர மக்களின்
வீடுகளில் மன அழுத்த்த்தால் பாதிக்கப்பட்ட எத்தனை பெண் வேப்பிலையினால் வீக்கமும்
வடுவும் பெற்றனரொ!யாமறியோம்!!!
தமிழ்ச்சமுதாயம் ‘பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம்
நினைக்காத்தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்துகொண்டே
வருகின்றது’ என்ற தந்தை பெரியாரின் சொற்களைக் கருத்திற்கொண்டு வாழவேண்டியது
அவசியம்.
-
டாக்டர்.மா.தேனருவி
Image : google
16/10/14

Comments
Post a Comment