சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ந்து பல வருடங்களாய் இருந்தும் காதலிக்கும் பெண்ணும் ஆணும் மிகத் தெளிவாய் அ்அன்பு மாறாமலிருந்தும்…ஆண்பிள்ளை படித்து அரசு வேலை பெற்ற பின்னரும் பெண்பிள்ளையின் வீட்டார் அவளை அவனுடன் அனுப்ப இசைந்தும் இச்சமூகத்தை பின் எதிர்கொள்ளத் துணிவில்லாமல் பெண் பிள்ளையைப் பெத்தவன் பால்டாயில் குடிப்பது என்பது சமுதாயம் முன்னேறத்துணிந்தும் அதன் இயலாமையை ஆவணப்படுத்துகிறது.ஊடே உபயோகம் செய்திருக்கும் எண்ண ஓட்டங்களின் வழி பல சம்பவங்களை பதிவு செய்த முறை மிகச் சிறப்பு. காட்சிகளும் மொழியும் கதைக்குப் மிகப் பொருந்துகிறது . அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய உண்மை எனினும் இக்கால நிகழ்வுகளினூடே வாசிப்பதில் சிற்றின்பம் காண வாசிக்கும் என்போன்றோர்க்கு உகந்ததண்று.இலக்கித்தில் கனியிருப்பக் காய் கவரா நிலையில் இருந்தலே அன்றாட துண்பங்களை மறக்கும் வழியாய் கொண்டுள்ளதால் ஏனைய அவரது படைப்புகளை தற்போது படிக்கும் எண்ணம் இல்லை.மேலும் எழுத்துக்களாய் ஓர் படைப்பை செய்யும் பொழுது சில சொற்களைப் பதியாமல் செல்வது இயலுமாயின் அது பிற்காலத்தில் அச்சுடுசொற்கள் வழக்கில் இல்லாமல் மறைந்துபோக்க்கூடும் என்பது என் கனவு. சென்னையில் வாகனம் ஓட்டுவதால் சில நேரங்களில் வாயால் சில சொற்களை உபயோகித்தாலும் அவற்றை பேனாவினால் எழுதுவதை எப்போதும் கைக்கொள்ளப்போவதில்லை என்பது என் நிலைப்பாடு. சிறந்த ஆவணம் .சில ஆண்டுகள் கழித்து இவற்றை வாசிக்கும் அளவு வளர்ந்திருப்பேனோ என்று பொருத்திருந்து காண வேண்டியது.

Comments
Post a Comment