இச்சிறுகதைத தொகுப்பு மிகச் சிறப்பானதொரு கதம்பம். ஆசிரியரின் கதைக்களப் பன்மை காட்டு மக்கள் பற்றிய அவரது ஆழ்ந்த அறவுக்கு சான்றாக உள்ளது. ஒரே வகையான காட்டுக்கதைகள் ஆயினும் ஒவ்வொரு பாத்திரமும் வாசகருக்கு ஓர் மாறுபட்ட அனுபவமாக அமைகிறது.கதையின் முக்கிய பாத்திரம் அதற்கு நல்ல முடிவு அல்லது இறப்பு என எதனைப்பெற்றாலும் அது தன் வேர்களை அடைவதாகவே அமைவது மிகச் சிறப்பு . மேலும் அது அம்மக்களின் வாழ்வில் அவர்கள் தம் வேர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதை உணர்த்துகிறது. அருமையான கதை சொல்லும் பாங்கு .சோகங்களை இயம்பினும் இனிய பாங்கில் எழுதப்பெற்றது மிக இனிது. அம்மக்களின் பேச்சுவழக்கில் உள்ளபடியே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழில் வாசிக்க சற்றே சிரம்மாக இருப்பினும் தமிழில் இருக்க வேண்டிய ஓர் புத்தகம் .

Comments
Post a Comment